ஐதராபாத்துக்கு எதிராக வெற்றி பெற்றது நிம்மதி அளிக்கிறது - ரிஷப் பண்ட்

ஐதராபாத்,ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.தொடர்ந்து 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த லக்னோ 16.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 26 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது,இப்போட்டியில் வெற்றிபெற்றது நிம்மதியளிக்கிறது. ஒரு அணியாக, கட்டுப்படுத்த முடியாதவற்றில் கவனம் செலுத்த முடியாது, என் வழிகாட்டி கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார், அதைத்தான் நான் இப்போட்டியில் செய்தேன். பிரின்ஸ் யாதவ் பந்துவீசிய விதத்தைப் பார்க்கும் போது சிறப்பாக இருந்தார். அதேபோல் ஷர்தூல் தாக்கூரும் மிக நன்றாக பந்துவீசினார். இந்த ஐ.பி.எல் தொடரில் நிக்கோலஸ் பூரனை மூன்றாம் இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்கியுள்ளது, நாங்கள் அவருக்கு சுதந்திரம் கொடுக்க விரும்புகிறோம் என்பதை உணர்த்துகிறது. ஒருவர் நன்றாக பேட்டிங் செய்து, நமக்காக அற்புதமாக விளையாடும் போது அவருக்கு தேவையான சுதந்திரத்தை நாம் வழங்க வேண்டும். அணி சிறப்பாக முன்னேறி வருகிறது. இதுவரை நாங்கள் எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடவில்லை, ஆனால் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
