அவர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர் - பேட் கம்மின்ஸ் பேட்டி

ஐதராபாத்,ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.தொடர்ந்து 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த லக்னோ 16.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 26 பந்தில் 70 ரன்கள் எடுத்த்தார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,இது முந்தைய போட்டியை விட சற்று மாறுபட்ட விக்கெட்டாக இருந்தது. அதனால் நாங்கள் இங்கு விரைவாக ரன்களைச் சேர்க்க வேண்டி இருந்தது. அவர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருப்பினும் இதனை ஒரு நல்ல விக்கெட் என்று கூறுவேன். அதுவும் உலகின் இரண்டாவது நல்ல விக்கெட் இதுவாகும். அவர்கள் இப்போட்டியில் மிகவும் நன்றாக பந்துவீசினர். மேலும், அவர்கள் சிறந்த திட்டத்தையும் கொண்டிருந்தனர். இப்போட்டியில் 190 ரன்களை எடுத்தது நல்ல முயற்சி என்று நினைக்கிறேன். இன்னிங்ஸ் முழுவதும் பேட்டிங் செய்ய எப்போதும் ஒரு நபர் தேவை, இஷான் கிஷன் மற்ற நாளில் செய்தது போல. ஆனால், அவர்கள் மிகவும் நன்றாக பந்து வீசினர். எங்களுக்கு அவர்கள் வாய்ப்புகளை கொடுக்கவில்லை. இது ஒரு நீண்ட தொடராகும், எங்களுக்கு மிக விரைவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். எனவே, நாங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
