25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும்-நிதின் கட்காரி தகவல்

  தினத்தந்தி
25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும்நிதின் கட்காரி தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-தற்போது இருவழிச்சாலையாக உள்ள 25 ஆயிரம் கி.மீ. தூர நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.10 லட்சம் கோடி செலவில் இப்பணி மேற்கொள்ளப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாராகி வருகின்றன. 2 ஆண்டுகளில் இப்பணி முடிவடையும் என்று நம்புகிறோம்.இந்த சாலை பணிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அவை முடிந்தவுடன், சாலை விபத்துகள் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதுபோல், 16 ஆயிரம் கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலைகள், ரூ.6 லட்சம் கோடி செலவில் 6 வழிச்சாலைகளாக மாற்றப்படும்.மேலும், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மலை மாநிலங்கள் ஆகியவற்றில் நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு மோடி அரசு உயர் முன்னுரிைம அளித்து வருகிறது.காஷ்மீரில் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள சாலை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் எளிதான பயணத்துக்காக 105 சுரங்கங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை