மாண்புமிகு மன்னராட்சி முதல்-அமைச்சர் அவர்களே.... விஜய் கடும் விமர்சனம்

  தினத்தந்தி
மாண்புமிகு மன்னராட்சி முதல்அமைச்சர் அவர்களே.... விஜய் கடும் விமர்சனம்

சென்னை,தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்... வணக்கம்.. கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது. ஒவ்வொரு குடும்பமும் வாழ் வேண்டும் என்பது நல்ல அரசியலா?.; இல்லை ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்பது நல்ல அரசியலா?. மாநாட்டில் இருந்து தற்போது வரை இடையூறு வந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் தவெக முன்னேறி செல்லும். ரசிகர்கள், தொண்டர்களுக்கு தடை போட நீங்கள் யார்?.மாண்புமிகு மன்னராட்சி முதல்-அமைச்சர் அவர்களே.... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் மட்டும் போதாதே முதல்-அமைச்சர் அவர்களே.... மக்கள் விரோத ஆட்சியை, மன்னராட்சி போல செய்கிறார்கள். கேள்வி கேட்டால் கோபம் வருகிறது.. விமர்சித்தால் மட்டும் கோபப்படுகிறார் முதல்-அமைச்சர். உங்கள் ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள் என்று பேசினார்.

மூலக்கதை