ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்திற்கு இந்தியாவில் தடை

  தினத்தந்தி
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்திற்கு இந்தியாவில் தடை

மும்பை,பிரிட்டிஷ் - இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கி, கடந்த ஆண்டு வெளிநாடுகளில் திரையிடப்பட்ட படம், 'சந்தோஷ்'. இந்தப் படம், இங்கிலாந்து சார்பாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேநேரத்தில், இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளதுவட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை இப்படம் பேசுகிறது. படத்தில் உள்ள கருத்துகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் வலியுறுத்திய நிலையில், படக்குழு மறுத்துள்ளது. மறுத்ததையடுத்து படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை