மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

  தினத்தந்தி
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை, சென்னையில் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 26 வயது மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டநிலையில், பாலியல் தொல்லை கொடுத்த அதே கல்லூரியில் பயிலும் மாணவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாலியல் துன்புறுத்தல், பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரிக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகி உள்ளது. புகார் குறித்த தகவல் அறிந்த மாணவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை