வண்டலூர் உயிரியல் பூங்கா: ஆண் சிங்கம் வீரா உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

  தினத்தந்தி
வண்டலூர் உயிரியல் பூங்கா: ஆண் சிங்கம் வீரா உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வீரா என்ற ஆண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. சிறு வயதில் இருந்தே இடுப்புத் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்த இந்த சிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாத காலமாக தீவிர மருத்துவ பராமரிப்பில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 28) அந்த சிங்கம் உயிரிழந்தது. இதனையடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பூங்கா வளாகத்திலேயே அந்த சிங்கம் புதைக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு, ராகவ் - கவிதா ஆகிய சிங்கங்களுக்கு வீரா என்ற ஆண் சிங்கம் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை