சிறுசேமிப்பு வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டு தோறும் மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. இதில் பெரும்பாலான திட்டங்களுக்கு வட்டி விகிதத்தில் கடந்த 4 காலாண்டுகளாக எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. இது 5-வது காலாண்டாக வருகிற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திலும் மாற்றமின்றி தொடர்கிறது.அந்தவகையில் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவும் தொடர்கிறது. மேலும் சுகன்யா சம்ரிதி திட்டம் 8.2 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 8.2 சதவீதமாகவும் நீடிக்கிறது.
மூலக்கதை
