ரம்ஜானுக்கு விடுமுறை இல்லை: வங்கிகள் செயல்பட ரிசர்வ் பேங்க் அறிவுறுத்தல்

புதுடெல்லி,ரம்ஜான் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்படி, அனைத்து வங்கிகளுக்கம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்த்து. இமாசல பிரதேசம் மற்றும் மிசொரம் ஆகிய மாநில வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது, ரம்ஜான் பண்டிகை தினமான நாளை, வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏனெனில் நாளையுடன் 2024-25-ம் நிதி ஆண்டு முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி 2025-26 புதிய நிதி ஆண்டு தொடங்க உள்ளது. இதனால், 2024-25 நிதி ஆண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. எனவேதான், நாளை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கிகளுக்கு ஆர்பிஐ எனப்படும் ரிசர்வ் வங்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நிதி ஆண்டின் இறுதி நாளான மார்ச் 31-ல் வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையிலும் சுமுகமான நிதி பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் விதமாகவும் வங்கிகள் நாளை செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக அரசு ரசீதுகள் மற்றும் பேமண்ட்களை கையாளும் வங்கிகள் அவசியம் வழக்கமான நேரபடி திறந்து இருக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல, வருமான வரித்துறையும் வரி சம்பந்தப்பட்ட பணிகள் இடையூறு இன்றி செயல்பட முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்கள் நாளை செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும் கூட வருமான வரித்துறை அலுவலகங்கள் இயங்கின என்பது கவனிக்கத்தக்கது.
மூலக்கதை
