போலீஸ் நிலைய கழிவறையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியை சேர்ந்த இளைஞர் கோகுல் (வயது 18). இவர் அதேபகுதியை சேர்ந்த சிறுமியை அழைத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் கோழிக்கோட்டில் கோகுலுடன் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும், சிறுமியை அழைத்து சென்ற கோகுலை பிடித்த போலீசார் கல்பட்டா போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், போலீஸ் நிலையத்தில் இருந்த கோகுல் இன்று காலை 0கழிவறைக்கு செல்ல வேண்டுமென கூறியுள்ளார். இதையடுத்து அங்குள்ள கழிவறைக்கு போலீசார் அணுப்பி வைத்துள்ளனர். கழிவறைக்கு சென்ற கோகுல் நீண்டநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு தனது சட்டையால் தூக்கிட்ட நிலையில் கோகுல் மீட்கப்பட்டார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கோகுலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
