சென்னை - டெல்லி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

சென்னை , 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 4வது போட்டியில் வரும் 5ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி அணியுடன் மோதுகிறது .இந்த நிலையில் , சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. நாளை காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
மூலக்கதை
