டி20 கேப்டன் பதவியில் இருந்து ரோவ்மன் பவல் நீக்கம் - விமர்சித்த பிராவோ

கிங்ஸ்டன்,ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது சிறிய அணிகளை வீழ்த்த கூட முடியாமல் தடுமாறி வருகிறது. இதற்கு காரணம் அந்த கிரிக்கெட் வாரியத்திற்கும் முன்னணி வீரர்களுக்கு இடையே எழுந்த சம்பள பிரச்சனை மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனை எழுந்த உடன் முன்னணி வீரர்கள் சொந்த அணிக்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை.அதற்கு பதிலாக உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டினர். தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் சேர்ந்து டி20 உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதன் பிறகு அந்த அணி தடுமாற்றங்களில் இருந்து மீண்டு வரும் எதிர்ப்பார்க்கப்பட்டது.இந்நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக டெஸ்ட் கிரிக்கெட்அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த கிரேக் பிராத்வெய்ட் தற்போது அந்த பதவியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும், வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு புதிய கேப்டனாக ஷாய் ஹோப் செயல்படுவார் எனவும் அறிவிக்கபட்டுள்ளது. தற்போது டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோவ்மன் பவல் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து பவல் நீக்கப்பட்டதை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிராவோ விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது ,வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் வீரர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்கின்றன என்பதை கரீபியன் மக்களுக்கும் கிரிக்கெட் உலகிற்கும் மீண்டும் ஒருமுறை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.ஒரு முன்னாள் வீரராகவும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ரசிகராகவும் என்னைப் பொறுத்தவரையில் இது மிக மோசமான முடிவுகளில் ஒன்றாகும். நமது டி20 அணி 9-வது இடத்தில் இருந்தபோதும் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டு ரோவ்மன் பவல், அணியை தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேற உதவினார். ஆனால் தற்போது அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளீர்கள். இது போன்ற ஒரு கேப்டனை நீக்கள் நீக்கியதற்கு என்ன காரணத்தை கூறுவீர்கள்.என்று பிராவோ விமர்சித்துள்ளார்.
மூலக்கதை
