"பீஸ்ட்" திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் வீடியோ வெளியீடு

  தினத்தந்தி
பீஸ்ட் திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் வீடியோ வெளியீடு

சென்னை,தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது.நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த 2022 ஏப்ரல் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிரடி, காமெடி கலந்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 236.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதில், அரபிக்குத்து பாடலில் இடம் பெற்ற விஜய்யின் நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்றது. அரபிக்குத்து பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். பாடலை அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோர் பாடி இருந்தனர். 'அரபிக் குத்து' வீடியோ பாடல் யூடியூபில் 70 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய் வீர ராகவன் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர். இந்த கதாபாத்திரத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் வீடியோவை தான் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளனர்.The uber cool Look Test of Veera Raghavan#Beast pic.twitter.com/ke4RFXYSUG

மூலக்கதை