ஜாக்கி சானின் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' டிரெய்லர் வெளியீடு

  தினத்தந்தி
ஜாக்கி சானின் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் டிரெய்லர் வெளியீடு

சென்னை,90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் கடந்த 2010-ல் வெளியான 'கராத்தே கிட்' படத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். 359 மில்லியன் டாலர் வசூலை ஈட்டிய இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனை இப்படத்தின் இரண்டாம் பாகமான 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்து முடித்துள்ளார்.இதில் ஜாக்கி சான், கராத்தே கிட் படத்தில் நடித்த ஹான் என்ற அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பென் வாங் லி பாங் என்பவர் புதிய மாணவராக நடிக்கிறார். இவர்களுடன், ஜோசுவா ஜாக்சன், ஷானெட் ரெனீ வில்சன், மிங்-நா வென், அராமிஸ் நைட், சாடி ஸ்டான்லி, வியாட் ஓலெப் மற்றும் ஜெனிபர்-லின் கிறிஸ்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படம் வருகிற மே மாதம் 30-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி உள்ளது.Remember what you're fighting for.Jackie Chan, Ben Wang, and Ralph Macchio star in Karate Kid: Legends - coming soon exclusively to movie theatres. #KarateKidMovie pic.twitter.com/JsJGm063v6

மூலக்கதை