புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை - அமைச்சர் ராஜேந்திரன் பதில்

  தினத்தந்தி
புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை  அமைச்சர் ராஜேந்திரன் பதில்

சென்னை,தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர் , அதை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் பேராவூரணி அசோக்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க சுற்றுலாத் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

மூலக்கதை