அணைப்பட்டி ஆஞ்சநேயர் திருக்கோவில் சுற்றுலாத் தலமாக அரசு அறிவிக்குமா? - அமைச்சர் ராஜேந்திரன் பதில்

  தினத்தந்தி
அணைப்பட்டி ஆஞ்சநேயர் திருக்கோவில் சுற்றுலாத் தலமாக அரசு அறிவிக்குமா?  அமைச்சர் ராஜேந்திரன் பதில்

சென்னை,தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நிலக்கோட்டை, அணைப்பட்டி ஆஞ்சநேயர் திருக்கோவில் சுற்றுலாத் தலமாக அரசு அறிவிக்குமா என்று நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. மாவட்ட ஆட்சி தலைவர் பரிந்துரை பெறப்பட்டு, தொடர்புடைய துறையின் கடிதம் வழங்கப்பட்டால் சுற்றுலாத்துறை சார்பில் மேம்படுத்தப்படும் என்று பதில் அளித்தார்.

மூலக்கதை