திருப்பூர்: ஜூஸ் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

திருப்பூர், திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த அந்தியூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சடைகவுண்டன் புதூர் கிராமத்தில் தனியார் ஜூஸ் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு பப்பாளி பழத்திலிருந்து ஜூஸ் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரோகித்தி கில் (வயது 24), அருண் கொமாங்கோ (30) ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜூஸ் தயாரிப்பில் வீணாகும் கழிவு நீர் தேங்கும் திறந்தவெளி தொட்டியில் ரோகித்தி கில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்றுவதாக சென்ற அருணும் தவறி தொட்டிக்குள் விழுந்து விட்டார். இதில் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூலக்கதை
