7-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சர்க்கரை தாஸ் (வயது48) என்பவர் பணியாற்றி வந்தார்.சில நாட்களுக்கு முன்பு 7-ம் வகுப்பு மாணவிகளை கண்டிப்பது போல் இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரு மாணவியின் தாயார் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியிட்ட அந்த பெண், போலீசாக பணியாற்றி வருகிறார். பாலியல் சீண்டல் குறித்து அந்த பள்ளி மாணவிகள், 1098 என்ற சைல்டு லைன் அமைப்புக்கு புகார் அளித்தனர். இதையடுத்து சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் விஜயலட்சுமி, பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் சர்க்கரைதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மூலக்கதை
