ஊர்வசி ரவுத்தேலா நடனத்தில் 'ஜாத்' படத்தின் முதல் பாடல் - வைரல்

மும்பை,பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி. இவர் பாலிவுட் நடிகர் சன்னி தியோலை வைத்து 'ஜாத்' படத்தை இயக்கி உள்ளார். கோபிசந்த் பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் இதுவாகும்.இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர் , ஜெகபதி பாபு , ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்தது. வருகிற 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'டச் கியா' வெளியாகி இருக்கிறது. நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடனமாடி இருக்கும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.A sizzler of a song that will rule the music charts #Jaat first single #TouchKiya ft. @UrvashiRautela out now ❤️▶️ https://t.co/gomhHTJ6wJ#JAAT GRAND RELEASE WORLDWIDE ON APRIL 10th.#BaisakhiWithJaat Starring Action Superstar @iamsunnydeolDirected by @megopichand… pic.twitter.com/KocQPw5xu6
மூலக்கதை
