ராணிப்பேட்டை: 210 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது

ராணிப்போட்டை போலீசாருக்கு கஞ்சா கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான 3 கார்களை மடக்கிப்பிடித்த போலீசார் அதில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் வெளி மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சா சிக்கியது. கடத்தலில் ஈடுபட்ட 3 கார்களை பறிமுதல் செய்த போலீசார் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
