அக்சய் குமார் நடித்துள்ள 'கேசரி சாப்டர் 2' படத்தின் டிரெய்லர் அப்டேட்

சென்னை,கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள படம் 'கேசரி அத்தியாயம் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் ஜாலியன் வாலா பாக்'. இதில் நடிகை அனன்யா பண்டேயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. ஜாலியன் வாலா பாக் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர சி.சங்கரன் நாயர் பிரிட்டீஸ் ராஜ்ஜியத்திற்கு எதிராக போராடினார். இந்த கதை மையமாக வைத்து தர்மா புரொடக்சன்ஸ், கேப் ஆப் குட் பிலீம்ஸ் மற்றும் லியோ மீடியா கலெக்டிவ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளன.இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை நடிகர் அக்சய் குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.1650 bullets, 10 minutes, and 1 man who roared against it.Witness the truth behind the horrid genocide that shook India.#KesariChapter2 trailer out tomorrow. In cinemas 18th April, worldwide. pic.twitter.com/OttSOuMzOW
மூலக்கதை
