'ஜோ' பட இயக்குனருடன் கைகோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி

சென்னை,நடிகரும் இயக்குனருமான ஹிப் ஹாப் ஆதி 'மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இவரது நடிப்பில் சமீபத்தில் 'கடைசி உலகப் போர்' என்ற படம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது.இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக 'ஜோ' பட இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரிஹரன் ராம் ஏற்கனவே ஆதியுடன் இணைந்து 'மீசைய முறுக்கு' உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்களது கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்த படத்தை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவலும், மற்ற நடிகர்கள் குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலக்கதை
