ஐபிஎல் 2025 ; பெங்களூருவுக்கு எதிரான டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு

பெங்களூரு,18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ஆட்டம் 7.30 மணிக்கு தொடங்குகிறது.இரு அணி வீரர்கள் விவரம்;- பெங்களூரு பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிகல், ரஜத் படிதார் (கேப்டன்), லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜாஸ் ஹேசில்வுட், யாஷ் தயாள் குஜராத் சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாரூக்கான், ராகுல் திவாடியா, அர்ஷத் கான், ரஷீத் கான், சாய் சுதர்ஷன், முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா
மூலக்கதை
