குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன ? வெளிப்படையாக பேசிய பெங்களூரு கேப்டன்

  தினத்தந்தி
குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன ? வெளிப்படையாக பேசிய பெங்களூரு கேப்டன்

பெங்களூரு,18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க ஆட்டக்காரர் சாய்சுதர்சன் 49 ரன்கள் அடித்தார். அதிரடியாக விளையாடி பந்துகளை சிக்சர்களுக்கும் பவுண்டரிகளுக்குமாக பறக்க விட்ட பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 39 பந்துகளில்73 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.இந்த நிலையில், இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக பேசிய பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது , பவர்பிளேவுக்குப் பிறகு நாங்கள் 190 ரன்களை இலக்காகக் கொண்டிருந்தோம், ஆனால் ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தது இந்த போட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நோக்கம் நன்றாக இருந்தது என்று நான் நினைக்கிறேன், ஆனால் பவர்பிளேயில் நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்திருக்கக்கூடாது, ஜிதேஷ், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் பேட்டிங் செய்த விதம் எங்களுக்கு சாதகமாக இருந்தது. பேட்டிங் வரிசையைப் பற்றி நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அவர்கள் சில நேர்மறையான நோக்கங்களைக் காட்டுகிறார்கள், இது எங்களுக்கு மிகவும் நல்லது. என தெரிவித்தார் .

மூலக்கதை