வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: காங்கிரசை சாடிய ஏக்நாத் ஷிண்டே

மும்பை,மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது.இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர். இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறினர். இதன் மூலம் சிறுபான்மையின மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. இந்தநிலையில், இது குறித்து மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-வக்பு திருத்த மசோதாவை எதிர்ப்பதன் மூலம் சிவசேனா யுபிடி தனது உண்மையான முகத்தைக் காட்டியுள்ளது. அவர்கள் இந்துத்துவாவையும் பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தையும் முற்றிலுமாக கைவிட்டுவிட்டனர். இது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் நேற்று மிகப்பெரிய குற்றத்தைச் செய்துவிட்டனர். அவர்களின் ஆதரவாளர்களும் கூட்டாளிகளும் அதற்காக வெட்கப்படுகிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது என்றார்.
மூலக்கதை
