வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கலானது; மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உரை

  தினத்தந்தி
வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கலானது; மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உரை

புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உரையாற்றி வருகிறார். இதில், நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் நடத்திய ஆலோசனை பற்றி அவர் பேசி வருகிறார். அவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 123 பேரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 82 பேரும், தி.மு.க.வுக்கு 10 பேரும், அ.தி.மு.க. 4 பேரும் உள்ளனர். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் மசோதா அவையில் நிறைவேற கூடும். இந்நிலையில், மசோதாவுக்கு பதிலளித்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உரையாற்றுகிறார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்றது. 12 மணி நேரம் விவாதத்திற்கு பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்று, பின்னர் 2 மணியளவில் அறிவிப்பு வெளியானது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. இதனால், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றும் முனைப்பில் ஆளும் மத்திய அரசு உள்ளது.

மூலக்கதை