வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுப்பு

  தினத்தந்தி
வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுப்பு

விருதுநகர்,விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 22 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில் சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், முத்திரைகள், செப்புக்காசுகள், தீப விளக்குகள், சிற்பங்கள், உள்பட 4,400-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் ஏற்கனவே கிடைத்து உள்ளன.இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓர் சிறப்பாக தங்கத்தால் செய்யப்பட்ட மணி போன்ற ஆபரணம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இந்த ஆபரணம் 6 மி.மீ. சுற்றளவு, 4.7 மி.மீ. பருமன், 22 மில்லி கிராம் எடையுடன் உள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.முதல் 2 கட்ட அகழாய்வை காட்டிலும் 3-ம் கட்ட அகழாய்வில் தங்கம் சார்ந்த பழங்கால அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை 7 தங்க பொருட்கள் கிடைத்து இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

மூலக்கதை