சென்னையில் மின்சார வாரியம் சார்பாக நாளை மறுநாள் சிறப்பு முகாம்

  தினத்தந்தி
சென்னையில் மின்சார வாரியம் சார்பாக நாளை மறுநாள் சிறப்பு முகாம்

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக வரும் 5-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-"தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, வரும் 5-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த முகாமில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கீழ்கண்ட முகவரியில் உள்ள செயற்பொறியாளர்கள் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மயிலாப்பூர் கோட்டம்: 110 கி.வோ. வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம், எண்.97, எம்.ஜி.ஆர். சாலை, (கோடம்பாக்கம் உயர் சாலை), சென்னை – 34 எழும்பூர் கோட்டம் : எண்.53, 1-வது தளம், 33 கி.வோ. எழும்பூர் துணைமின் நிலைய வளாகம், ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, பெரியமேட், சென்னை – 07 அண்ணா சாலை கோட்டம் : எண். 6, லபாண்ட் ரோடு, சிந்தாதிரிபேட்டை, சென்னை – 2 , தி.நகர் கோட்டம் : 110கி.வோ. வள்ளுவர்கோட்டம் துணைமின் நிலையம், எண்.97, எம்.ஜி.ஆர். சாலை, (கோடம்பாக்கம் உயர் சாலை), சென்னை – 34 பெரம்பூர் கோட்டம் : 110 கி.வோ. செம்பியம் துணை மின் நிலைய வளாகம், ஈ.பி. சாலை, (சிம்ப்சன் எதிரில்), சென்னை – 11 தண்டையார்பேட்டை கோட்டம் : எண்.805, டி.எச். ரோடு, (மணிக்கூண்டு எதிரில்), தண்டையார்பேட்டை, சென்னை – 21 வியாசர்பாடி கோட்டம் : 33 கி.வோ. வியாசர்பாடி தொழிற்பேட்டை துணைமின் நிலைய வளாகம், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வியாசர்பாடி, சென்னை – 39பொன்னேரி கோட்டம் : 33 கி.வோ. துணைமின் நிலைய வளாகம், டி.எச். சாலை, வெண்பாக்கம், பொன்னேரி – 601204அம்பத்தூர் கோட்டம் : 110 கி.வோ. 3வது பிரதான சாலை துணைமின் நிலைய வளாகம், அம்பத்தூர் எஸ்டேட், சென்னை – 58 ஆவடி கோட்டம் : 1வது தளம், எண்.229, என். எம். சாலை, ஆவடி, சென்னை – 54 அண்ணா நகர் கோட்டம் : எண்.1100, எச் -பிளாக், 5வது தெரு, 11வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை – 40 கிண்டி கோட்டம் : No.1, அண்ணா பிரதான சாலை, (110கி.வோ. KK நகர் எஸ்எஸ் வளாகம்), K.K.நகர், சென்னை – 78 போரூர் கோட்டம் : 110கி.வோ. எஸ்.ஆர்.எம்.சி. துணைமின் நிலைய வளாகம், செட்டியார் அகரம் சாலை, போரூர், சென்னை – 116 கே.கே.நகர் கோட்டம் : எண்.1, அண்ணா மெயின் ரோடு, (110 கி.வோ. துணைமின் நிலைய வளாகம், கே.கே. நகர், சென்னை – 78 அடையாறு கோட்டம் : 110 கி.வோ. துணைமின் நிலைய வளாகம், (தரை தளம்), வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை – 42 தாம்பரம் கோட்டம் : 110 கி.வோ. புதுத்தாங்கல் துணைமின் நிலைய வளாகம் முல்லை நகர், தாம்பரம் மேற்கு, சென்னை – 45சோழிங்கநல்லூர் கோட்டம் : 110 கி.வோ. துணைமின் நிலைய வளாகம், குளோபல் மருத்துவமனை அருகில், சேரன் நகர், பெரும்பாக்கம், சென்னை – 100 பல்லாவரம் கோட்டம் : 110 கி.வோ. துணைமின் நிலைய வளாகம், ஆபிசர்ஸ் லேன், பல்லாவரம், சென்னை – 43 ஐ. டி. காரிடார் கோட்டம் : 110 கி.வோ. டைடல் பார்க் துணைமின் நிலைய வளாகம், சி.எஸ்.ஐ.ஆர். சாலை, தரமணி, சென்னை – 113."இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை