திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் நடந்து சென்ற சிறுத்தைப்புலி

  தினத்தந்தி
திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் நடந்து சென்ற சிறுத்தைப்புலி

ஈரோடு,ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் மான்கள், யானைகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள், உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகிறது..இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி வெளியேறியது. பின்னர் சிறுத்தைப்புலி திம்பம் மலைப்பாதை 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள சாலையில் சுற்றித்திரிந்தது. அதன்பின்னர் சிறிது தூரம் தடுப்புச்சுவரில் நடந்து சென்ற சிறுத்தைப்புலி அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது.இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் நேரில் பார்த்து அச்சமடைந்தனர். இதனால் வாகனங்களை சற்று தூரத்தில் நிறுத்திக்கொண்டனர். வாகனங்களில் இருந்தபடியே சிறுத்தைப்புலியை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடு்த்தனர். இந்த காட்சி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை