ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள்;-சன்ரைசர்ஸ் ஐதராபாத்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, ஹென்ரிச் கிளாசென், கமிந்து மெண்டிஸ், சிமர்ஜீத் சிங், பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக், சுனில் நரேன், ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மொயீன் அலி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, ரமன்தீப் சிங்.
மூலக்கதை
