சிவா நடித்த "சுமோ" படத்தின் புதிய ரிலீஸ் தேதி நாளை வெளியீடு

சென்னை,நடிகர் சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுமோ. இயக்குனர் ஹோசிமின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கடந்த 2021-ம் ஆண்டே இப்படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது. 'சுமோ' திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் இந்த தடவை மிஸ்ஸே ஆகாது என தெரிவித்துள்ளனர்.Ultimate Summer Carnival Loading!#Sumo Release Date Announcement Arriving Tomorrow 5 PM! X @IshariKGanesh @VelsFilmIntl@actorshiva @priyaanand @DirRajivMenon @sphosimin @cinemainmygenes @nivaskprasanna @Ashkum19 @RIAZtheboss @V4umedia_ @akash_tweetz @Linqmarqet pic.twitter.com/zFJzNwWtES
மூலக்கதை
