ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி,ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தற்போது இருக்கும் ஏவுதளங்கள் 1000 டன் எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாது என்பதால், 3வது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 3,984.86 கோடி செலவில் இந்த ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. 90 மீட்டர் உயரமும் அதிகபட்சமாக 1,000 டன் எடையும் கொண்ட ராக்கெட்டுகளை ஏவும் திறனுடன் அமைக்கப்பட உள்ள இந்த ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகள் 4 ஆண்டுகளில் அதற்கான பணிகள் நிறைவடையும்' என்று தெரிவித்தார்.
மூலக்கதை
