திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

  தினத்தந்தி
திருமண ஆசை காட்டி பிளஸ்2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

திருவண்ணாமலை,திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் தினமும் வேலைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்புகிறார்.மணிகண்டன், செய்யாறு தாலுகா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ் 2- மாணவியுடன் பழகி வந்தார். நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மாறியது. தங்கள் காதலை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மணிகண்டன் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.கடந்த பிப்ரவரி மாதம் மாணவி மட்டும் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த மணிகண்டன், அங்கு சென்று மாணவியிடம் திருமணம் செய்துகொள்வோம் என ஆசைகாட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதே போல் அவ்வப்போது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவரது பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்தபோது நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.

மூலக்கதை