ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தங்க நகை பறிப்பு

  தினத்தந்தி
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தங்க நகை பறிப்பு

ராணிப்பேட்டை, சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 60). இவர், தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு, சென்னை செல்லும் சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார். ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து நின்று புறப்பட்டது. அப்போது, அதே பெட்டியில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென பாலசரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு, ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து பாலசரஸ்வதி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மூலக்கதை