குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

  தினத்தந்தி
குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை, தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை, சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக அந்த பாதைகளில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரெயில் (வ.எண்.16848) வருகிற 10-ந் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி சென்றடையும். இந்த ரெயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16847) வருகிற 30-ந் தேதி மேற்கண்ட மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.கோவை-நாகர்கோவில் ரெயில்கோவை-நாகர்கோவில் பகல் நேர ரெயில் (வ.எண்.16322) வருகிற 25, 26-ந் தேதி, 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கரூரில் இருந்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் சென்றடையும். இந்த ரெயில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.அதேபோல, மதுரை-பிகானீர் அனுராவத் எக்ஸ்பிரஸ் (வ.எண்.22631) ரெயில் வருகிற 10-ந் தேதி மதியம் 12 மணிக்கு பதிலாக மதியம் 12.45 மணிக்கு புறப்படும்.ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16845) வருகிற 5,8 மற்றும் 11-ந் தேதிகளில் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கரூரில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16846) வருகிற 3,5,8 மற்றும் 11-ந் தேதிகளில் இந்த ரெயில் செங்கோட்டையில் இருந்து கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.குருவாயூர் எக்ஸ்பிரஸ்மதுரை-கோவை ரெயில் (வ.எண்.16722) வருகிற 11-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரையும், வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும் போத்தனூர் வரை மட்டும் இயக்கப்படும். அத்துடன், சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) வருகிற 9-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் சென்னையில் இருந்து காலை 10.20 மணிக்கு பதிலாக தாமதமாக பகல் 11.50 மணிக்கு புறப்படும்.

மூலக்கதை