ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும் - பிரதமர் மோடி

  தினத்தந்தி
ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும்  பிரதமர் மோடி

புதுடெல்லி, ராமரின் அவதார தினம் இன்று (ராம நவமி) இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் புகழ்பெற்ற ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; "அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகள்.பிரபு ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும், நமது அனைத்து முயற்சிகளிலும் நம்மை வழிநடத்தட்டும். இன்று மாலையில் ராமேஸ்வரத்தில் இருப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!"இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை