மத்திய பிரதேசம்: தாயின் நண்பருடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

போபால், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் இளம்பெண். திருமணமான இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்தநிலையில் தன்னுடன் பணிபுரிந்து வரும் வாலிபர் ஒருவருடன் மோட்டர் சைக்கிளில் மகளை ஏற்றிவிட்டு வீட்டில் இறக்கிவிட சொல்லி அனுப்பினார். இதனை தொடர்ந்து அந்த சிறுமியுடன் தனது வீட்டிற்கு வாலிபர் சென்றுள்ளார். நண்பர்களுக்கு செல்போன் மூலமாக அழைப்பு விடுத்தார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த நண்பர்களுடன் அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டநிலையில் சிறுமியை கற்பழித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூலக்கதை
