திண்டுக்கல்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 20 பவுன் நகை பறிப்பு

  தினத்தந்தி
திண்டுக்கல்: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 20 பவுன் நகை பறிப்பு

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டிபகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38).ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி சங்கீதா(30). சம்பவத்தன்று சங்கீதா மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள பன்னியானில் உள்ள உறவினர் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கைப்பையில் நகைகளை வைத்து கொண்டு பள்ளப்பட்டியில் இருந்து ஊர்மெச்சிக்குளத்துக்கு தனியார் பஸ்சில் வந்து உள்ளார். ஊர்மெச்சிக்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கைப்பையை திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த 20 பவுன் நகைகளை யாரோ திருடி சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து சங்கீதா சமயநல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடியவரை தேடி வருகிறார்கள்.

மூலக்கதை