ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவரால் அதிர்ச்சி

  தினத்தந்தி
ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவரால் அதிர்ச்சி

புதுடெல்லி,ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றது. இதில் வணிக வகுப்பில் பயணம் செய்த துஷார் மசந்த் என்ற பயணி சக பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து விமான ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பாங்காக்கில் விமானம் தரையிறங்கியதும் அது குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தன் தவறுக்காக துஷார் மசந்த், சக பயணியிடம் மன்னிப்புக் கேட்டதாகவும், அந்த மன்னிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. விமானம் தரையிறங்கியதும் அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. புகார் இல்லாமலேயே, துஷார் மசந்த்துக்கு வாய்மொழி எச்சரிக்கையை விமான நிறுவன அதிகாரிகள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.

மூலக்கதை