பாஜக - அதிமுக கூட்டணி: மக்கள் பாடம் புகட்டுவார்கள் - கனிமொழி எம்.பி. பேட்டி

சென்னை,சென்னையில் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அவர்கள் பிரிந்துவிட்டதாக சொன்னாலும் கூட்டணி தொடரும் என்பதை சுட்டிக்காட்டினர்.பாஜகவுடன் கூட்டணியை அறிவிக்கும் நிர்பந்தத்திற்கு அதிமுகவினர் ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நடத்திய காசி தமிழ் சங்கமத்தினால் தமிழ் எப்படி வளர்ந்தது என தெரியவில்லை. தமிழுக்காக பாஜக என்ன செய்தது.அண்ணா, அம்மையார் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவரோடு கூட்டணியை அமைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி செயல் தன்னுடைய கட்சி, தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.கல்வி நிதி, வக்பு சட்டம், நீட் ஆகியவற்றை எதிர்ப்பதாக சொன்ன அதிமுகவின் நிலைப்பாடு என்ன? இதையெல்லாம் பேசியவர்களோடு மேடையில் அமர்ந்திருக்கிறார் அவர்.எடப்பாடி பழனிசாமி மேடையில் பேச கூட உரிமை இல்லாத நிலையில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படுகிறது.தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாஜகவுக்கு ரத்தின கம்பளத்தை விரித்துள்ளது அதிமுக. அதிமுக செயலுக்கு தகுந்த பாடத்தை வரக்கூடிய தேர்தலில் மக்கள் தருவார்கள். நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஐ.டி, அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறார்கள். திமுக ஆட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வரக்கூடிய தேர்தலில் அதை தெளிவாக பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
