காஞ்சிபுரத்தில் நாய் கடித்து 8-ம் வகுப்பு மாணவர் பலி

  தினத்தந்தி
காஞ்சிபுரத்தில் நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவர் பலி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சி புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய மகன் விஸ்வா (வயது 13). 8-ம் வகுப்பு படித்து வந்த விஸ்வா, கடந்த 7-ந்தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது அவனை நாய் கடித்தது. வலது கையில் காயம் ஏற்பட்ட விஸ்வாவை அருகே உள்ள ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் விஸ்வாவுக்கு வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெற்றோர் விஸ்வாவை ஒரகடம் அருகே உள்ள மாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வா பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை

மூலக்கதை