தங்கம் விலை 2-வது நாளாக சரிவு: எவ்வளவு குறைந்துள்ளது?

  தினத்தந்தி
தங்கம் விலை 2வது நாளாக சரிவு: எவ்வளவு குறைந்துள்ளது?

சென்னை, தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. ரூ.68 ஆயிரம், ரூ.69 ஆயிரம், ரூ.70 ஆயிரம் என புதிய உச்சங்களை கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உயரத்தையும் எட்டியது. தொடர்ந்து 5 நாட்களாக விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று சற்று குறைந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 770-க்கும், ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 755-க்கும், ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. பவுனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.35 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8,720-க்கும், ஒரு பவுன் ரூ.69,760 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.110 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை