அமெரிக்கா வரி விதிப்பு: இந்திய பொருட்களின் ஏற்றுமதி குறையும் அபாயம்

வாஷிங்டன்,அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறிய டிரம்ப், பரஸ்பர வரிகளை விதித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளார். தற்போது இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பரஸ்பர வரி நிறுத்தி வைக்கப்பட்ட நாடுகளுக்கு அடிப்படை வரி 10 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, உருக்கு, வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு என்ஜினீயரிங் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று என்ஜினீயரிங் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அச்சம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 400 கோடி டாலர் முதல் 500 கோடி டாலர் வரை ஏற்றுமதி குறையும் என்று கூறியுள்ளது.
மூலக்கதை
