வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு இடையே இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

  தினத்தந்தி
வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு இடையே இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

மும்பை,சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் அரசியல் பதற்றம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தையில் முதலீடுகள் குறைந்து தங்கத்தின் மீதான முதலீடுகள் உயர்ந்துள்ளது. நடுத்தர மக்கள் உள்பட அனைவருக்கும் தங்கத்தின் மீதான முதலீடே முதல் தேர்வாக உள்ளது. இதனால் வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் தங்கம் ரூ.71,560 வரை விற்கப்படுகிறது. இந்தநிலையில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி குறித்தான புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து 52 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விலையேற்றம் நீடித்தாலும் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 15 டன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை