குஜராத்: குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம் - விமானி பலி

  தினத்தந்தி
குஜராத்: குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்  விமானி பலி

அகமதாபாத், குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் தனியார் விமான பயிற்சி நிலையம் ஒன்று செயல்படுகிறது. நேற்று பிற்பகலில் இந்த பயிற்சி மைய விமானம் ஒன்றில், விமானி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தில் தீப்பற்றியது. பின்னர் விமானம் ஒரு மரத்தின் மீது விழுந்து எரிந்தது. அம்ரேலி நகரத்தின், சாஸ்திரி நகர் குடியிருப்பு பகுதியில் இந்த விமானம் விழுந்து கிடந்தது.இந்த விபத்தில் பயிற்சி விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விமான விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மூலக்கதை