டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த விராட் கோலி

  தினத்தந்தி
டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த விராட் கோலி

பெங்களூரு,ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்களும், படிக்கல் 50 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.பின்னர் 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 194 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 49 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.இந்த ஆட்டத்தையும் சேர்த்து டி20 போட்டிகளில் முதல் இன்னிங்சில் விராட் கோலி 50+ ரன்கள் அடிப்பது 62-வது முறையாகும். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் அதிக முறை 50+ ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் பாபர் அசாம் 61 முறை 50+ ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:- 1. விராட் கோலி - 62 முறை2. பாபர் அசாம் - 61 முறை 3. கிறிஸ் கெயில் - 57 முறை 4. டேவிட் வார்னர் - 55 முறை 5. பட்லர்/ பாப் டு பிளெஸ்சிஸ் - 52 முறை

மூலக்கதை