'இந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்' - நானி

  தினத்தந்தி
இந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்  நானி

ஐதராபாத்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற 1-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் புரமோசன் பணி நடைபெற்று வருகிறது. அதில் பேசிய நடிகர் நானி, தான் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார். மேலும், தனக்கு வயதாவதற்காக காத்திருப்பதாகவும், அப்போதுதான் வித்தியாசமான கதாபாத்திரங்களை முயற்சி முடியும் எனவும் கூறினார்.

மூலக்கதை