கஞ்சா கடத்திய வழக்கு: 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

  தினத்தந்தி
கஞ்சா கடத்திய வழக்கு: 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

மதுரையில் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த மாதம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கீரைத்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருவேலங்காட்டு பகுதியில் 25 கிலோ கஞ்சாவை தரையில் புதைத்து வைத்து இருந்ததாக பாண்டியராஜன், ஜாக்கி(எ)பிரசாந்த் , அந்தோணி மற்றும் சரண்யாஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவுற்ற நிலையில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 25 கிலோ கஞ்சாவை கடத்தி வைத்திருந்த பாண்டியராஜன், ஜாக்கி(எ)பிரசாந்த் மற்றும் சரண்யா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு சாட்சிகள் விசாரணையில் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபணம் ஆவதால் எதிரிகளை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து எதிரிகளுக்கு 12 வருடங்கள் கடும் காவல் சிறை தண்டனையும். ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை