ஊட்டியில் கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி

சென்னை,கோடை காலத்தை முன்னிட்டு வாகன நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை விதிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த வகையில் இ-பாஸ் நடைமுறையின் கீழ் ஊட்டிக்கு வார நாட்களில் தினசரி அதிக பட்சம் 6 ஆயிரம் வாகனங்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் வர அனுமதிக்கப்பட்டு வருகிறது.அதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்கள் மற்றும் வார இறுதியில் 6 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமலில் இருக்கும்.இந்த நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மலர் கண்காட்சிகள் நடைபெற உள்ளதால், கண்காட்சி நாட்களில் வாகனப் போக்குவரத்துக்கு சிறிது தளர்வு அளிக்கும் விதமாக கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி வழங்கலாம் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.இதன்படி கோடை கால விழாக்களின் போது கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவசியம் ஏற்படும் பட்சத்தில் கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.இதே போல கொடைக்கானலுக்கு கூடுதலாக 300 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
மூலக்கதை
