திண்டுக்கல் குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

திண்டுக்கல்,திண்டுக்கல் குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-"திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், குடகனாறு அணையில் இருந்து, வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மூலம், திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் 27.04.2025 முதல் 25.07.2025 வரை 90 நாட்களில் 45 நாட்களுக்கு (7 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறப்பும் 7 நாட்கள் தண்ணீர் நிறுத்தம்) வலது பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி வீதம் 155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மற்றும் இடது பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 14 கன அடி வீதம் 54.43 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 209.95 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் 4262.78 ஏக்கர் நிலங்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் 4737.22 ஏக்கர் நிலங்கள், ஆக மொத்தம் 9000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்."இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
